இந்த சிவப்பு சூரியன் விநியோகஸ்தராக கால் பதித்தது.
கண்ணியம் காத்தது. பலனாக தயாரிப்பாளராக அடுத்த கட்டம் சென்றார். பின்னர் நடிகர்,இயக்குநர் என்கிற கூடுதல் தகுதிகளுக்கும் உரியவராகி ‘ஆல் ரவுண்டர் ‘என்கிற நிலைக்கு உயர்வு பெற்றார்.
இன,மான தமிழர்.
இவருக்கு இன்று பிறந்தநாள்.
இதயம் நிறைந்த இனிய நினைவுகளுடன் வாழ்த்துகளை ‘சினிமா முரசம்’ பகிர்ந்து கொள்கிறது.
வாழ்த்துகள்.
“சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் ஊரார் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்,
ஒரு மானம் இல்லை.
அதில் ஈனம் இல்லை.
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
எதிர்காலம் வரும் என் கடமை வரும்“
என்கிற வரிகள் ராஜ்கிரணுக்குப் பிடித்துப் போன மான மரியாதை வரிகள்.
இவரைப் போல ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் எவருமிலர் தமிழ்ச்சினிமாவில்!
“நம்ம ரத்தம்.நம்மள விட்டு எங்க போவாங்க. சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டு வந்திருக்காங்க.அவங்களை அரசாங்கம் ஆதரிக்க வேணாமா… எவனும் உண்மையா இல்லேண்ணே…நமக்குன்னு கடமைகள் இருக்குண்ணே” என்பார் இந்த மதம் சார்பற்ற தமிழர்.இவர் வீட்டில் பாபாவும் உண்டு இஸ்லாமும் உண்டு.