இந்திய அரசு வழங்கும் ‘பத்ம’ விருதுகள் எல்லாம் அவரவர் தகுதியை வைத்து அரசுதான் தேர்வு செய்கிறது……
இப்படித்தானே மக்கா நெனச்சிட்டிருந்தோம்.
அதெல்லாம் தப்புன்னு இப்ப பா.ம.க கட்சியின் தேர்தல் அறிக்கை சொல்லிருக்கு.
“இவங்களுக்கு ஓட்டுப்போட்டா இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’விருது வாங்கிக் கொடுக்க” பாடுபடுவாங்களாம்.
என்ன சார் இப்படி கொச்சைப் படுத்திட்டிங்களே. நாளைக்கு அவரது திறமைக்காக விருது கொடுத்தாலும் அது சிபாரிசு செஞ்சு வாங்கினதுன்னுதானே ஜனங்க நெனைப்பாங்க.
பா.ம.க.வுக்கு இசைஞானி மேல கோபம் இருந்தால் இப்படியா தேர்தல் அறிக்கையில் காட்டுவது!