வித்தியாசமாக சண்டைக்காட்சிகள் அமைய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இயக்குனரும் ஆசைப்படுவார்கள்.அதிலும் சூர்யாவை வைத்து படம் எடுக்கும் லைகா நிறுவனம் இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு ஃபுல் சப்போர்ட்.
பிறகென்ன…இதுவரை வந்திராத அளவுக்கு ரயில் சண்டையை படமாக்க வேண்டும் என்று இந்தியா முழுக்க இடம் தேடினார்கள். அலைந்ததில் சிக்கியது ஒரிசாவில் உள்ள ஒரு நெடுந்தொடர் ரயில்பாதை. பயன்படுத்தாமல் கிடந்தது. ‘காப்பான்’ படக்குழுவுக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி ஆகிவிட்டது.
வாடகைக்கு இரண்டு ரயில்களை வாங்கி அந்த பாதையில் ஓடவிட்டு அதகளமாக படமாக்கி விட்டார்கள்.
லண்டனில் தொடங்கிய படப்பிடிப்பு ஒரிசாவுக்கு வந்திருக்கிறது. மூர்க்கத்தனமாக சண்டை .இதுவரை இந்திய சினிமாவில் இத்தைகைய சண்டையை பார்த்திருக்க முடியாது. சூர்யா மிகுந்த ரிஸ்க் எடுத்து நடித்து மிரட்டி இருக்கிறார் என்கிறார்கள்.
மோகன்லால்,பொமன் இரானி,ஆர்யா,சாயிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏகப்பட்ட ஆர்வம்,ஆசையுடன் சூர்யா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.