எல்லாம் சரி இத்தனை தொகுதிகள் என்பதை அறிவித்தாகி விட்டது. ஆனால் அவை எந்தெந்த தொகுதிகள் என்பதை சொல்லவேண்டுமல்லவா?
அங்கேதான் சிக்கல் சண்டித்தனம் பண்ணுகிறது.
ஒரே தொகுதிகளை பா.ம.க.,தேமுதிக இரண்டும் கேட்கிறதாம். யார் விட்டுக் கொடுப்பார்கள்.?
பா.ம.க.வுக்கு ஒரு மந்திரி பதவி தருவோம் என பா.ஜ.க.சொல்லியிருப்பதால் தனக்கு வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுக் கொடுப்பதற்கு முன் வராது.
ஆகவே முன்னதாகவே வந்து கேப்டனை சந்தித்து விட்டார்.
இன்று காலை ஜி.கே.வாசன் வந்து கேப்டனை பார்த்து விட்டுப் போன பின்னர் முதல்மந்திரி எடப்பாடி செல்லூர் ராஜுவுடன் வந்து பேசியிருக்கிறார்.
என்ன பேசினார்கள் என்பது இன்று மாலை தெரியும் என்கிறார்கள்.