எழுத்து ,இயக்கம்; ஏபிஜி.ஏழுமலை, ஒளிப்பதிவு;பால.பழநியப்பன்., இசை; சி.சத்யா. பாடல்; யுகபாரதி. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்;ஆர்.மூர்த்தி.
கிஷோர் ரவிச்சந்திரன்,தம்பி ராமையா, பிரியங்கா, ஆர்.என்.ஆர் .மனோகர்.சரண்ராஜ்,
“சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ,
வழியிட்ட வாள் காண வாரீர்.” என வாழ்த்துப் பாடுவதால் இது காவிரி நதி நீர் பிரச்னை என எண்ணி விட வேண்டாம்.
இது முழுக்க முழுக்க ஆலயங்கள் தொடர்பான சஸ்பென்ஸ் திரில்லர். கோபுரம் எழுவதில் இருந்து மூலவர் அமைவது வரையிலான ஆதார அடிப்படைகளை வைத்துக் கொண்டு சிந்தித்திருக்கிறார் இயக்குநர் ஏழுமலை.
அகவன் என்கிற பெயர் அற்புதமான தமிழ் வரி, குறுந்தொகையில் “அகவன் மகள் பாடுக பாட்டே” என்கிற வரிகள் வரும்.அகவன் என்றால் தெய்வம் என இங்கு பொருள். அகத்தில் இருப்பவன் என கதாசிரியர் சொல்வதும் சரியே. இதற்காகவே பாராட்டலாம்.
இவருக்குத் தக்க துணையாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பால.பழநியப்பன். கதைக் களம் ஒரு பரிகாரக் கோவில்.அங்கே இரவில் நடமாடுவது பேய்,பிசாசுகள் என்கிற மூட நம்பிக்கையை பரப்பி ஒரு அறிவார்ந்த கும்பல் ஆலய ரகசியங்களை களவாட முயற்சிக்கிறது. முடிந்ததா இல்லையா என்பதை காதலுக்கு பலியிட்டு சொல்கிறார்கள்.
பாராட்டுக்குரியவர்களில் முதலிடம் லொக்கேஷனை தேர்வு செய்தவர்களுக்கு.
அடுத்து பறவைப் பார்வையிலாகட்டும் பழுதடைந்திருக்கும் பழைமையின் பெருமையை காட்டுவதாகட்டும் வெகு சிறப்பு.
திரைக்கதையில் சஸ்பென்சை உயிரோட்டமாக கொண்டு சென்ற இயக்குநர் அதை சுருக்கிச் சொல்லியிருக்க வேண்டும்.
மூன்று பொண்டாட்டிகள் இருந்தும் இரவுப்பொழுது கோவிலுக்குள் என்கிற மன அழுத்தமுடன் ஹீரோ கிஷோர் ரவிச்சந்திரனுடன் வாழவேண்டிய காமடியுடன் கூடிய நாவிதர் வேடம்.நாயகனை ஸ்பெஷல் பிராஞ்சை சேர்ந்தவர் என்பதை கொண்டு போயிருக்கிற விதம் பாராட்டுக்குரியது.
உயர் போலீஸ் அதிகாரியாக பழைய சரண்ராஜ்.
நாயகியாக பிரியங்கா,
சீட்டு நடத்தி கொள்ளையடிப்பவர்களைப் பற்றி நறுக்கென சொல்லியிருக்கிறார்கள். ராஜராஜ சோழனின் வாளின் பெருமையையும் சொல்லியிருக்கலாம்.
மக்கள்தான் இன்னமும் அத்தகைய நிறுவனங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமா முரசம் ரேட்டிங்.;