தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்சங்கத்தலைவரும்,தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளருமான நடிகர் விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் இன்று மதியம் 1 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.அனிஷாவை காதலிப்பதாகவும், அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் தனது டுவிட்டரில் விஷால் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று அவர்கள் இருவருக்கும் இடையே ஐ தராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.விரைவில் திருமணத்தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.