“கட்சிப் பொறுப்பாளர்களிடம் விவாதித்ததில், அவர்கள் விருப்ப மனுவை கொடுக்கவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.
ஆகவே இந்தத் தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்திருக்கிறேன். அதற்கான விருப்பமனுக்கள் பெறப்படுகின்றன.
நான் முன்பு சத்திரியன்.
இப்போது நான் விவேகமான சாணக்கியன்.
அதனால்தான் எதையும் யோசித்து முடிவெடுக்கிறேன்.
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி என்னை கூட்டணியில் இணைந்து பணியாற்றக் கேட்டுக்கொண்டது.
நான் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன்.
அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தது.
இரட்டை இலையில் நிற்கச் சொன்னார்கள்.
எனக்கு அப்படி நிற்பதில் விருப்பமில்லை. முடியாது என்று சொல்லிவிட்டேன்.
அப்படியெனில் ராஜ்யசபா சீட் தருகிறோம்.
பிரச்சாரம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். எனக்கு அதிலும் உடன்பாடு இல்லை. மறுத்துவிட்டேன்.
இன்றைய அரசியலில்அறிவாளி, உழைப்பாளி,போராளி,
என நினைத்தால் ஏமாந்து விடுவோம்.
சட்ட மன்றத் தேர்தலே பிரதானம்,நாடாளுமன்றத் தேர்தல் காட்டுவோம் நிதானம்.”என்றார்.
இதனால் அறியப்படும் உண்மை என்னவெனில் பா.ம.க, தேமுதிக ஆகிய கட்சிகளிடம் வேறு என்னென்னவெல்லாம் தருவதாக அதிமுக சொல்லியிருக்கும் கொடுத்திருக்கும்.!
என்ன கொடுத்தார்களோ,
என்ன வாங்கினார்களா?