சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டிய அழுத்தத்தைக் கொடுத்தது வேறு யாருமல்ல பிரதமர் மோடிதான் என்கிறது அரசியல் வட்டாரம்.
ஆனால் சாமர்த்தியமாக தனது என்ட்ரியை சட்டசபைத் தேர்தலுக்கு ரஜினி தள்ளி வைத்திருப்பதற்கு காரணமும் மோடிதான்!
பாராளுமன்றத்தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் கட்டாயம் ரஜினி களம் இறங்கியாக வேண்டும். இல்லையேல் தமிழத்தில் பிஜேபியின் கிளையாக ரஜினியின் புதிய கட்சி அமையவேண்டும்.
இதைத்தான் மோடியுடனான ரஜினியின் சந்திப்பில் பேசி இருக்கிறார்கள்.
“மன்றத்தினர் இனி ரசிகர்கள் இல்லை.அவர்கள் காவலர்கள்” என ரஜினி அறிவித்தது மோடியின் ஐடியாதான்.
அதைத்தான் மோடி இன்று சொல்லியிருக்கிறார்.தன்னை சவுக்கிதார் என்று சொல்லிக்கொள்வதன் காரணம் இப்போது புரிந்திருக்கும்.
இந்தியில் ‘சவுக்கிதார்’ என்றால் ஆங்கிலத்தில் ‘வாட்ச்மேன் ‘என அர்த்தம். தமிழில் ‘காவலர்’ என பொருள்.
ஆக ரஜினியின் ‘காவலர்களும்,மோடியின் காவலர்களும் ஒரே அணியினர்தான் !
ஆக சாணக்கியம் எங்கிருக்கிறது?
மோடியிடம் இருக்கிறது.