பிஜேபி தலைவர்கள் எல்லோரும் தங்கள் பெயருக்கு முன்னாள் சவுக்கிதார் என போட்டுக் கொள்வதற்கு பிரதமர் மோடி முன்னோடி…
அதனால் எல்லோரும் அப்படியே போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆட்சிக்கு வந்ததுமே இந்த சிந்தனை வந்திருந்தால் மக்கள் நம்புவார்கள்.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்த சவுக்கிதார் வந்திருப்பதால் பலவித சந்தேகங்கள் வருவது இயல்பு.
இத்தனை நாளும் முடி சூடாத மன்னர்களாக வந்தவர்கள் எப்படி காவலர்களாக மாறினார்கள்?
ராகுல் காந்தி சும்மாவே நக்கல் பேர்வழி.
“சவுக்கிதார் சோர் ஹை” என்கிறார்.
ஒவ்வொரு இந்தியனும் சொல்வது சவுக்கிதார் சோர் என்பதுதான்.சுஷ்மாஜியை கட்டாயப்படுத்தி சவுக்கிதார் என சொல்ல வைத்திருப்பது நல்லதல்ல என்கிறார் ராகுல்காந்தி