சினிமாவில் இரட்டை வேடம் என்றால் ஒருத்தர் நல்லவர்,இன்னொருத்தர் கெட்டவர்.
இந்த பார்முலாதான் காலம் காலமா இருந்து வருகிறது.
இதில் பேமஸ் உத்தமபுத்திரன்,நீரும் நெருப்பும், மற்றும் சில காமடி கலந்து வந்திருக்கின்றன.
உலகநாயகன்,கமல்ஹாசன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆகியோர் ரசனை மிகுந்த படங்களை கொடுத்திருக்கிறார்கள்.
இதுவரை இரட்டை வேடம் ஏற்று நடித்திராத ராஜ்கிரணுக்கு வசமாக ஒரு கதை கிடைத்திருக்கிறது. மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்தான் பேசிக் கொண்டிருக்கிறது. கதைப்படி இரண்டு நல்லவர்கள்,அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ,அதில் ஒரு சஸ்பென்ஸ் …அவருக்கு கிடைத்திருக்கிற பிறந்தநாள் பரிசுதான் இந்த கதை.