மெரட்டுறாங்கய்யா…அஜித் சொன்ன மாதிரி இருக்குல்ல.?
அப்படியெல்லாம் இல்ல. இது ராஜமவுலியின் மிரட்டல்.
பாகுபலிக்கு 430 கோடின்னார்.
இப்ப #RRR படத்துக்கு 350 கோடி யில் இருந்து 400 கோடி வரை செலவு ஆகும்னு சொல்றார் ராஜமவுலி.
தமிழ்,தெலுங்கு,இந்தி,மலையாளம் னு பத்து இந்திய மொழிகளில் தயாராகிற படம்.!
ஜூனியர் என்டிஆர்,சமுத்திரக்கனி,ராம் சரண் இவர்களுடன் அலியாபட் இருக்கிறார். அஜய் தேவ்கன் இணைந்திருக்கிறார்.
அதாவது இரண்டு உண்மைப் போராளிகளின் கதையை அடிப்படையாக வைத்து கற்பனை செய்திருக்கிறார் ராஜமவுலி.
அப்ப நம்ம சமுத்திரக்கனிக்கு தமிழ்நாட்டு போராளி கேரக்டர் என்பது புரிகிறது. எப்ப சார் ரிலீஸ்?
ஜூலை 2020.!
அப்ப நல்லா மெரட்டுங்க சார்!