அப்பனும் பிள்ளையும் களவாணிகள். அதுவும் குற்றாலத்துக்கு வருகிறவர்களிடம் ஆட்டையப் போடுகிற அலேக் பார்ட்டிகள்.
இந்த மாதிரியான கதையில் உண்மையான அப்பா-பிள்ளைய நடிக்க வைத்தால் என்ன?
இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாருக்கு படக்குன்னு ஞாபகத்துக்கு வந்தவர்கள் மக்கள் செல்வன் விஜயசேதுபதியும் அவரது பிள்ளை சூர்யாவும்தான்.!
எல்லாம் சரி…படிக்கிற பிள்ளையை சேது நடிக்கவைப்பாரா,சம்மதிப்பாரா?
கே.புரொடக்ஷன்ஸ் ராஜராஜன், சேதுபதி படத்தின் தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் இருவருக்கும் அதிர்ஷ்டம் இருக்கும்போது சம்மதம் கிடைக்காமல் இருக்குமா?
அதுதான் சிந்துபாத் பெயரில் வரப்போகிறது.
சேது ஒகே சொல்ல ஷூட்டிங் ஆரம்பமாகி விட்டது. சேதுவுக்கு அஞ்சலி ஜோடி. சேதுபதியில் எஸ்.ஐ.யாக வந்து மிரட்டிய லிங்காதான் தாய்லாந்து வில்லனாக வருகிறார்.பதினெட்டு கிலோ எக்ஸ்டிராவாக உடம்பு வெயிட் போட்டிருக்கிறது.
யுவன் இசை.
அசத்துங்கப்பா சிந்துபாத்தை!