தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.வேட்பு மனு தாக்கலும் ஆரம்பம் ஆகியாச்சு.இன்னும் வேட்பாளர்கள் பரிசீலனை நடக்கவில்லை.
அதற்குள் வேட்பாளர்களின் அட்டகாசம் தாங்கல.
திருப்பூர் தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருக்கிறார் ஷேக் தாவூத்.
வாக்காளர்கள் எத்தகைய மனநிலையில் இருப்பார்கள் என்பதை எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள் பாருங்கள்.!
இவர் வெற்றி பெற்றால் ஆம்பளைகளுக்கு மாதம் தோறும் பத்து லிட்டர் பிராந்தி ஃப்ரி.!
பொம்பளைகளுக்கு கல்யாணத்துக்கு பத்து பவுன்,பத்து லட்சம்,
தமிழகத்தில் மதுவிலக்கு வராமல் போராடுவேன்.!
எப்படி? இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப்போகுதோ தெரியல.
போன எலக்சனுக்கு மோடி அறிவிச்ச வாக்குறுதிகள் எங்கே போச்சுன்னே தெரியல. அந்த தைரியத்தில்தான் இப்படியெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கிறாங்களோ என்னவோ!