சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவாரா? கட்சியை ஆரம்பிப்பாரா என தமிழக மக்கள் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
“எனது இலக்கு சட்டசபைதான்,பாராளுமன்றத் தேர்தல் அல்ல””என்பதை அவர் தெளிவாக சொல்லிவிட்டுத்தான் சினிமாவைத் தொடர்கிறார்.
தற்போது ஏஆர்.முருகதாஸ் படம்.
அதற்கடுத்து கார்த்தி சுப்புராஜ்க்கு மற்றொரு படம்.
இதன்பின்னர் அஜித்தை இயக்கிக் கொண்டிருக்கும் வினோத்தின் படம்.
இப்படி வரிசை கட்டி நிற்பதாக சொல்கிறார்கள்.
அப்படியானால் அவரின் கணக்கு சரிதான்.!சட்டசபைத் தேர்தல்வரை சினிமாவைத் தொடரலாம்.
அவரது அரசியல் அறிவிப்பு என்னாவது ?
அளந்து பார்ப்பதற்குத்தான் பாராளுமன்றத் தேர்தல், மற்றும் பதினெட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கப்போகிறதே! அதன் முடிவினைப் பார்த்துவிடலாம். என கணக்குப் போட்டுக் காத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
உலகநாயகனின் சினிமா செல்வாக்கு,அவரது அரசியல் ஈடுபாடு எந்த அளவுக்கு மக்களிடம் மாறுதலை உருவாக்கியிருக்கிறது, வாக்கு சதவீதம் எவ்வளவு கிடைத்திருக்கிறது…அகில இந்திய அளவில் அவருக்கு என்ன மரியாதை என்பதை நடக்கவிருக்கிற தேர்தல் தெளிவாக சொல்லிவிடும் அல்லவா?
கூட்டணி சேர்ந்திருக்கும் தேமுதிக.வின் வாக்குச்சதவீதம் கூட்டணியால் உயருமா சரியுமா,அவரது தனித்துப் போட்டியிட்ட காலத்தில் கிடைத்த வாக்கு சதவீதம் இவையெல்லாம் எதனால் மாறி இருக்கிறது,என கணித்துச்சொல்வதற்கு ஒரு குழுவே இருக்கிறது ரஜினிக்கு.!
அதை கணக்கிட காத்திருக்கிறார் ரஜினி காந்த்.
ஆளும் கட்சியான அதிமுக மீண்டும் அமருமா,அல்லது தற்போதைய எதிர்க்கட்சியான திமுக ஆட்சி பீடம் ஏறுமா அப்படி நடந்தால் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? அதிமுகவை உடைத்து வெளியில் வந்த தினகரனின் அ.ம.மு.க.வின் நிலை என்ன?
அதிமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக இந்த கட்சிகளில் எது அமரும்?
இவ்வளவையும் அளந்து பார்த்து விட்டுதான் ரஜினி தனிக்கணக்கு தொடங்குவார் என்கிறார்கள்.