எழுத்து,இயக்கம்.கிருஷ்ண பாண்டி. ஒளிப்பதிவு.: எம்.புகழேந்தி. இசை; பிரசன்னா. பாடலாசிரியர் ; கபிலன் வைரமுத்து. நாயகன்; ரெஜித் மேனன், நாயகி ; ராதிகா பிரீதி, மற்றும் மவுலி, கல்யாணி நடராசன்.
****************************************************************************
காதல் கதை.
சாதாரண கோவில்.
அர்ச்சகராக கடமையாற்றுகிற மவுலி.
அவரின் வசதிகளை பார்க்கிறபோது திருப்பதி கோவிலில் தலைமை அர்ச்சகருக்கு இருக்கிற வசதிகள் இவருக்கும் இருக்கிறது, கார் மட்டும்தான் இல்லை.
இவரது பேத்தி ராதிகா பிரீத்திக்கு டாக்டர் ரெஜித் மேனன் மீது ஒருதலைக் காதல். அது எப்படி இருமனம் கலந்து திருமணம் வரை செல்கிறது என்பதை சினிமாவுக்கே உள்ள தன்மை மாறாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ண பாண்டி.
சுருக், நறுக் என சொல்ல வேண்டியதைக் கூட பாரதம் படிக்கிற உபன்யாசகர் மாதிரி விரித்திருக்கிறார்.அதாவது டிவி சீரியல் மாதிரி ஜவ்வாக இழுத்திருக்கிறார்.
முற்பாதியில் ஒருதலைக் காதல்.
விபத்தில் நினைவிழந்த நாயகிக்கு நினைவூட்ட நாயகன் படும் பாடு பிற்பாதியில்!
சாம்பார் என முடிவுகட்டிய பின்னர் மட்டன் குழம்புக்கான மசாலாவை அதில் சேர்க்க முடியாதல்லவா! ரெஜித்,ராதிகா இருவரும் கிழித்த கோட்டினை தாண்டவில்லை.சுத்தம்.!
சண்டைக்காட்சி வைக்க வேண்டும் என்கிற கட்டாயம்!அதற்காக வீல் சேர் நாயகியை அம்போவென விட்டு விட்டு நாயகனை தேவையில்லாமல் வேறு இடத்துக்கு ‘ நகர்த்த ‘ வேண்டிய அவசியம் என்ன? இப்படி சில உறுத்தல்கள்.!
கதையாக எழுதினால் படிப்பதற்கு சுவாரசியமாக இருந்திருக்கும்
படமாக்கியதில்தான் பல விபத்துகள்.
சினிமா முரசத்தின் ரேட்டிங்.