கல்யாணம் ஆகி ஒரு பெரிய குடும்பத்தின் மருமகளாக இருப்பவர் சமந்தா அக்கிநேனி.
இவர் அடிக்கடி ஆங்கில சினிமா பத்திரிகைகளுக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுப்பார். இன்ஸ்ட்ராகிராமிலும் கவர்ச்சி கண்களைக் குத்தும்.
அதற்கு அவரது ரசிகர்களின் கமெண்ட்ஸ் கன்னா பின்னாவென பின்னி எடுக்கும்.
இதற்கு என்ன சொல்கிறார் சமந்தா?
“அதை நான் கண்டு கொள்வதில்ல. நல்லது செய்தாலும் ,செய்யாவிட்டாலும் குற்றம் சொல்றவங்க சொல்லிட்டுத்தான் இருப்பாங்க.
சிலர் நீ தமிழ்ப் பொண்ணுதானே ஏன் இங்கிலீஸ்ல பேசுறன்னு கமென்ட் போட்டாங்க,
நான் ஆங்கிலேய-இந்தியப் பொண்ணு.எங்க வீட்டில் இங்கிலீஸ்லதான் பேசிக்கிவோம்கிறது தெரிய நியாயம் இல்லையே! நான் எதுக்கு சீன் போடணும்.”என்கிறார்.