என்னடா… இன்னமும் பொள்ளாச்சி காமக்கொடூரங்களைப் பற்றி யாருமே சினிமா எடுக்கப்போவதாக சொல்லலியேன்னு நினைச்சா இயக்குநர் ராகுலிடம் இருந்து செய்தி.!
“ஹாய்…நான் பொள்ளாச்சி சம்பவங்களை மையமா வச்சு ஒரு படம் பண்ணிட்டிருக்கிறேன்.கருத்துகளை பதிவு செய் என்பது படத்தின் பெயர்!” என்று தம்ப்ஸ் அப் காட்டினார்.
கட்டபொம்மன் பாணியில் “பலே வெள்ளையத் தேவா!”என நாம் ராகுல் தொடர்ந்தார்.
“ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான்
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சமூக வலை தல மான பேஸ்புக் பற்றியது தான் இந்த படம். பேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி ,காதலர்களாகி பின் அவனிடம் தன் கற்பை இழந்த பெண். அதோடு அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடமிருந்து தப்பி வந்த பெண் என்ன முடிவெடுக்கிறார், என்ன மாதிரியான தண்டனையை அவனுக்கு கொடுத்தாள் என்பது தான் கதை. பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் பலவற்றை என் “கருத்துக்களை பதிவு செய்” படத்தில் நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் கட்டத்தில் இருக்கும் சூழலில் பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது… நானும் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு தான் என்பதை அப்போதே பதிவு செய்திருந்தேன். பெத்தவங்க பிள்ளைகளுக்கு போனை வாங்கிக் கொடுப்பதாக நினைக்கிறாங்க…இல்லவே இல்லை “பிசாசத்தான் வாங்கி கொடுக்கிறாங்க” படம் விரைவில் வெளி வர உள்ளது என்றார் ராகுல் … இன்றைய பேஸ்புக், இணையதளம், மற்றும் சமூக வலைதள காதல்கள் எல்லாமே பெண்களை சிக்க வைக்கும் அபாய வலை என்பதை சொல்லும் படம் தான் இது. படம் விரைவில் வெளி வர உள்ளது என்றார் ராகுல்.. இந்த படத்தில் பிரபல நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன்தான் நாயகன். நாயகி உபாஷ்னா ராய்.
|