“வாய்ப்புத்தருவதாக சொல்லி தன்னை எத்தனை பேர் சீரழித்தார்கள் என்பதை பட்டியல் போட்டவர் ஆந்திர நடிகை ஸ்ரீ ரெட்டி.
அவருக்கு தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ் பட வாய்ப்புத் தருவதாக சொன்னார்.இன்னும் பலர் அவரை வைத்து படம் எடுக்கபோவதாக அறிக்கைகள் வாசித்தார்கள்.
ஆனால் அதெல்லாம் என்ன ஆச்சு ?
கடலில் போய் உப்பைக் கொட்டிய கதைதான்!
பொள்ளாச்சி பாலியல் காமக்கொடூரன்கள் மீது செம காண்டில் இருந்தார் ஸ்ரீ ரெட்டி. அவரது முக நூல் பதிவுகளில் கோபத்தைக் காட்டினார்.
நடிகர்கள்,தயாரிப்பாளர்கள் மீது சரமாரியாக காமப்புகார்கள் கொடுத்த போது எவ்வித எதிர் விளைவுகளும் இல்லாமல் இருந்தது.
ஆனால் பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுத்ததும் தமிழக அரசியல்வாதிகள் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்!
வளசரவாக்கம் வீட்டில் கை வரிசையைக் காட்டியிருக்கிறார்கள்.
கண்களில் கனல் பறக்க ஸ்ரீ ரெட்டி ..
“நான் என்னுடைய நோக்கத்தை மறக்கல.எதற்காக இங்கே இருக்கேனோ அதை மறக்கல. பொள்ளாச்சி காமுகர்களை விட மாட்டேன்! அதற்காகத்தான் சென்னையில் இருக்கிறேன்.
என் எதிரிகள் அதிகம்.!
நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கி இருக்கிறார்கள்.
கடவுள் புண்ணியத்தில் எனக்கு எதுவும் ஆகவில்லை.
தமிழ்நாடு போலீசுக்கு நன்றி.!”