தேர்தல் நெருங்குகிறது அதனால் சினிமா பட டிரெய்லரைப் போல மோடிக்கும் ஒரு டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதைப் பார்த்த புண்ணியவான்களில் நடிகர் சித்தார்த்தும் ஒருவர். சிறப்பாக விமர்சனம் செய்திருக்கிறார்.
“பிரதமர் ,மோடி டிரெய்லரைப் பார்க்கும்போது பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை தனி ஆளாக எதிர்த்து நின்று சுதந்திரம் வாங்கித்தந்த மோடி குறித்து ஏன் காட்டவில்லை என்கிற கேள்வி எழுந்தது!!!
மதச்சார்பு கொண்ட நக்சல்களால் உருவாக்கப்பட்ட மோசமான உத்தியாகத் தோன்றுகிறது.!!!
மோடி போன்ற வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும் திரைப்பட இயக்குனர்களின் ‘நேர்மை’யை பார்க்கும்போது என்னுடைய மனம் குழம்புகிறது.
இந்த டிரெய்லரை பார்க்கிறபோது ஜெயலலிதாவை அடிப்படையாகக்கொண்ட பல படங்கள் எப்படி வரும் என்று தெரியவில்லை!!!
உங்களுக்கு வரலாறு தெரியாமல் இருப்பதை மன்னித்து விடலாம்.ஆனால் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதை மன்னிக்கவே முடியாது!”
இவ்வாறு சித்தார்த் தனது கோபத்தை கொட்டியிருக்கிறார்.