நாடு முழுவதும் சவ்கிதார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.இந்நிலையில்,ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், நாய் ப்ரூனோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள வாட்ச்மேன் படக்குழு, ‘போஸ்டர்’ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.அந்த போஸ்டரில், ‘நானும் சவ்கிதார் தான்’ என்ற பலகையை நாய் வைத்திருப்பது போல காட்சியும் இடம் பெற்று இருந்தது. அந்த போஸ்டர் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஒன்றுமே நடக்காமல் போனது. இலவச விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்த்த படக்குழுவும் ஏமாந்து போனது. இந்நிலையில் சவ்கிதார் ப்ரூனோவுடன் விளையாடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். நடப்பு நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் நெட்டிசன்கள் மட்டும் ஜி.வி.பிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
A lighter moment with #bruno boy … #watchman in theatres from April 12 … #alvijay @nirav_dop #arunmozhimanikkam pic.twitter.com/EogdZVHSTF
— G.V.Prakash Kumar (@gvprakash) March 22, 2019