பக்கத்து வீடுகளில் கம கமவென கரி குழம்பு , மீன் வறுவல் வாசம் மூக்கைத் துளைக்கிற போது நம்ம வீட்டுப் பிரியாணி இன்னும் ‘தம்’மிலேயே இருக்கிறது என்றால் ஆர்வம் அலை அடிக்காதா என்ன?
எப்பய்யா ‘என்.ஜி.கே.’பிரியாணி கிடைக்கும் என்று சூர்யாவின் லட்சக்கணக்கான ரசிகர்கள் தவியாய் தவித்துப் போனார்கள்.
சூர்யா-செல்வராகவன் இணைந்திருக்கிற படம்தான் என்.ஜி.கே.. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
ரகுல்பிரீத்,சாய் பல்லவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
2018- தீபாவளி ரிலீஸ்.பட்டுச்சட்டை வேட்டி ,பட்டாசு என கும்மி எடுத்து விடலாம் என சூர்யாவின் ரசிகர்கள் காத்திருந்தனர்.ஆனால் தள்ளிப் போய்விட்டது.
சரி ரசிகர்களை ரொம்பவும் காக்க வைப்பது நல்லது இல்லை என முடிவு செய்து டீசரை காதலர் தினத்தன்று வெளியிட்டார்கள்.
செம ரெஸ்பான்ஸ்!
அடுத்த கேள்வி எப்ப சார் ரிலீஸ்?
பொலிடிகல் படம் என்பதால் இந்த எம்.பி.எலக்சனுக்கு வெளியிட்டு விடுவார்கள் என நம்பினார்கள்.
ஆனால் மே மாதம் ரிலீஸ்.!
சூர்யா டப்பிங் பேசும் தகவலை நேற்று நள்ளிரவு அறிவித்தார் தயாரிப்பாளர் பிரபு.
கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.! வான் கோழி பிரியாணி!