மலேசியாவில் வரும் 17-ம் தேதி தொடங்குவதாக இருந்த ரஜினியின் கபாலி யின் முதல் நாள் படப்பிடிப்பு சென்னையில் ஏ.வி.எம்.பழைய பிள்ளையார் கோவிலில் தொடங்குகிறதாம். ரஜினியின் ஏ.வி.எம் பிள்ளையார் கோயில் சென்டிமென்ட். கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்தின் வெற்றிப் படங்களின் முதல் நாள் முதல் காட்சி ஏ.வி.எம் பிள்ளையார் கோயிலில் ரஜினி தேங்காய் உடைப்பது போலத்தான் தொடங்கும். இந்தப் படத்துக்கும் அப்படி ஒரு காட்சி எடுக்கப்படும் என்கிறார்கள். அதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் ,மலேசிய விமான நிலையத்திலும் ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்படும் எனத் தெரிகிறது.தற்போது சென்னையில் மட்டும் சில காட்சிகள் எடுக்கப்படும் என்றும் , இதை தொடர்ந்து மலேசியா மற்றும் பாங்காக்கில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த தகவல்கள் விரைவில் ரஞ்சித்தின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகலாம் எனத்தெரிகிறது.