பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து, இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கப்படாததால் படம் வெளியாகாமல்அப்படியே நிற்கிறது. இப் பாடல் காட்சிகளில் நயன்தாரா நடிக்க மறுப்பதாகவும், மீதிப் பணம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பதாகவும் தயாரிப்பாளர் டி ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா மீது புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாருக்கு நயன்தாரா பதில் அளித்துள்ளார். அதில், “நான் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக பல முறை தேதிகள் ஒதுக்கிக் கொடுத்துவிட்டேன். ஆனால் ஒருமுறை கூட அவற்றை சிம்புவும் அவர் தந்தை ராஜேந்தரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது நான் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் அவர்கள் கேட்கும் தேதியில் நடிக்க முடியவில்லை. நியாயமாக என் கால்ஷீட்டை வீணடித்ததற்காக நான்தான் புகார் தந்திருக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவுக்கு ஆதரவாக இயக்குனர் பாண்டிராஜூம் கருத்து தெரிவித்துள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிம்புன்னாலே வம்பு தான் என்பது நிஜம் தானா!!