இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் நம்ம பிரபுதேவா.
காதல் வாழ்க்கையில் கில்லி. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
ரமலத்தும் தன்னுடைய பெயரை லதா என மாற்றிக்கொண்டு இந்து ஆனார். மாரியம்மன் பக்தை.
இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தை. மூத்தவன் கேன்சர் நோயினால் மரணம் அடைத்து விட்டான்.சில காலம் ஒற்றுமையுடன் வாழ்ந்தவர்கள் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
மகன்கள் மீது பிரபு தேவாவுக்கு கொள்ளை பிரியம்.இவர் மும்பையில் இருந்தபோது விடுமுறை நாட்களில் தனது பையன்களை அழைத்துக் கொள்வார். வெளிநாடுகளுக்கும் கூட்டிச்செல்வது உண்டு.
மகன்கள் அம்மாவிடம் இருக்கிறார்கள். அப்பாவிடமும் இருப்பார்கள். கல்வி செலவு முழுமையும் பிரபுதேவாதான்! மகன்களை பிரிந்து தன்னுடனேயே வந்து விட வேண்டும் என்கிற நிபந்தனையினால்தான் நயனுடனான காதல் முறிந்தது என்கிற ஒரு சேதி உண்டு.
மகன்களைப் பார்ப்பதற்கு லதாவின் வீட்டுக்கு செல்லும் பிரபுதேவா வீட்டுக்குள் போகாமல் வாசலிலேயே இருந்து கொண்டு மகன்களை அழைத்துக் கொண்டு போய் விடுவாராம்.
திடீரென ஒரு சேதி!
பிரபுதேவாவின் மனைவி ரமலத் என்கிற லதா இறந்து விட்டார் என்பதாக.!
போன் செய்தால் லைனில் வருகிறார் ரமலத்.!
ரமலத்தின் அம்மாதான் 23 ம் தேதி இறந்து இருக்கிறார் .எல்லா காரியமும் நடந்து முடிந்து விட்டது. தற்போது மகன்கள் மட்டுமே.! நல்ல வேளை கேட்டிங்களே என அந்த சோகத்திலும் வரட்டு சிரிப்பு.
இன்றுவரை தனக்கு ஆதரவாக இருந்து வருகிற பிரபல ஏஎல்.எஸ்.குடும்பத்தைச்சேர்ந்த பெண் தயாரிப்பாளரிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ரமலத்.
“அக்கா, அவர் ( பிரபுதேவா.) இன்னும் எத்தனை காலத்துக்கு தனியாகவே இருக்கப் போகிறார்.எனக்கும் அவரது துணை வேண்டும்.வயசாகி விட்டது. எங்களை சேர்த்து வையுங்கள்” என்று சொல்லி இருக்கிறார்.
இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் நயன் -விக்னேஷ்சிவன் திருமணம் நடக்காது போலிருக்கிறதே.!