தரமான படங்களுக்கு ஐ.எஸ்.ஐ .முத்திரை குத்தப்பட்ட இயக்குநர் ஏஎல்.விஜய்.
அஜித்தின் கிரீடம் படத்தின் வழியாக இயக்குநராக வந்தார்.பின்னர் சீயான் விக்ரமின் தாண்டவம் மற்றும் தெய்வத்திருமகள்,மதராசப்பட்டனம்,தேவி ,தியா என பட்டியல் நீளுகிறது.தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது. மே மாதம் 3-ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்.
இயக்குநர் என்பதால் இவரது வீட்டுக்கு அடிக்கடி ஆமி ஜாக்சன்,கீர்த்தி சுரேஷ் ,சாய் பல்லவி ஆகியோர் வந்து போவது உண்டு.!
நடிகை அமலாபாலை காதலித்து நடந்த கல்யாணம் இரண்டு வருஷம் கூட தாக்குப் பிடிக்கவில்லை.
2014 ல் திருமணம்.17-ல் விவாகரத்து.
ஆனாலும் விஜய்யைப் பற்றி அமலாபாலிடம் கேட்டால் “நல்லவர் வல்லவர்,”என பீல் பண்ணுகிற மாதிரி பேசுகிறார்.
மீண்டும் காதல் மலருமா?
“சான்சே இல்ல தலைவா” என்கிறார் விஜய்யின் அப்பா ஏஎல் .அழகப்பன் .
“நடிகை சாய் பல்லவியை உங்க பிள்ளை லவ் பண்றார்னு ஊரே பேசுதே? கரு படத்திலி இருந்து மன்மதன் வேலையை காட்டிட்டான்னு சொல்றாங்களே?”
“இல்லவே இல்லை.அவனைப் பார்க்க எத்தனயோ பேர் வர்றாங்க.இப்ப சாயேஷா கல்யாணத்தை விஜய்தான் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து ஆர்யாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சார். அந்த பொண்ணு ஆசை பட்டது. இவர் நடத்தி வச்சார்.
விஜய்க்கு இன்னும் 2 மாசத்தில் கல்யாணம் நடந்திரும். பொண்ணெல்லாம் பார்த்தாச்சு. ஆனா நடிகை இல்ல. அவர் மட்டும் பொண்ண வந்து பார்த்திட்டார்னா கல்யாண வேலைகள் ஆரம்பமாகிடும். சின்னப்பிள்ளைங்க சாய் பல்லவி.அதைப் போயி …”என மேட்டருக்கு புல் ஸ்டாப் வைத்தார் அழகப்பன்.