இயல்பான நடிப்புன்னா அது விஜயசேதுபதிதான்”என்று சொல்லுமளவுக்கு அவரது படங்கள் இருக்கின்றன. நடிப்பிலும் அதீதமான உடல் மொழியை காட்டுவதில்லை.
தமிழுக்கு கிடைத்த பல திறமையான நடிகர்களில் விஜயசேதுபதியும் ஒருவர்.
“நம்பர் ஒன்,பாக்ஸ் ஆபீஸ் நடிகர் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்ல.!இந்த பிலிம் இண்டஸ்ட்ரியில் நானும் ஒருத்தன்தான். இதை விட பெருமை வேறென்ன?தியாகராஜன் குமாரராஜா டைரக்சன் சூப்பர் டீலக்ஸ் படத்தின் பேரு.அதில நான் திருநங்கை.!” என்றவரிடம் “அப்படி என்ன அந்த கேரக்டரில் ஸ்பெஷல்?” என்றதும் ” இந்த படத்தை நான் ஒத்துக் கொண்டதில் ஒரு காரணம் இருக்கு. திருநங்கை கேரக்டர். அந்த கதை சொல்லப்பட்ட விதம் என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணியது.
கதையை கேட்டதுமே மறு சிந்தனைக்கு இடமில்லாமல் எனக்கே கொடுத்திருங்க என்றேன். எனக்கு ஷில்பா கேரக்டர் கிடைச்சது” என்றார்.
“இந்த கேரக்டருக்காக ஹோம் ஒர்க் பண்ணுனிங்களா?”
“நான் அந்த வகையான நடிகர் இல்ல.நான் மேக்கப் போட ஒன்னரை மணி நேரம் ஆகும்.என்னுடைய பாடி லாங்குவேஜ் மாறிடும்.நடிச்சு முடிஞ்சதும் வீட்டுக்குப் போனால் முதுகு வலி பின்னிடும். இந்த சமூகத்தில் திருநங்கைகள் ரொம்பவே புறக்கணிக்கப்படுறாங்க நான் யாருங்கிறதை மத்தவங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல,”என்றார்.
முகத்தில் வலி இருந்தது.