‘கொலையுதிர்காலம் ‘ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீடு விழா ‘ஹில்டன் ஹோட்டலில் அமர்க்களமாக நடந்தது.
அன்றைய ஹைலைட்ஸ் முதலிடம் சுரேஷ் காமாட்சி.
இரண்டாம் இடம் பிரவீன் காந்திக்கு.!
இருவரும் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக மோதிக் கொண்டார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆண் மகன் வேண்டும் என்று சுரேஷ் காமாட்சி சொல்ல ,இவருக்குப் பதில் கொடுத்த பிரவீன் காந்தி “விஷாலை திட்டி திட்டித்தானே சிம்புவின் கால்ஷீட் வாங்கினீங்க சுரேஷ் காமாட்சி “என நய்யப் புடைத்தார்.
ஆனால் அன்று மாட்டியதோ ராதாரவிதான்.!
ராதாரவியின் ஜென்ம விரோதியாகி விட்ட சின்மயி மறுசமயம் வாய்ப்பது அரிது என கதையை கட்டி விட்டு ராதாரவிக்கு கட்டம் கட்ட வைத்து விட்டார்.
தேர்தல் காலமாச்சே! திமுகவுக்கு பயம் வந்து விட்டது. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக கட்சியிலிருந்து விலக்கி வைத்திருக்கிறார்.
ராதாரவி என்ன சொல்கிறார்.?