இந்த வாய்ப்பை தவற விட்டால் மறு வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காது..அதனால நாமும் சேர்ந்து நாலு அப்பு அப்புவோம். நமது எதிரிக்கு சிக்கல் என்றால் நமக்கு கொண்டாட்டம் தானே!
தென்னிந்திய நடிகர் சங்கத்தை சரத்குமார்-ராதாரவி ஆகியோரிடம் இருந்து வெற்றிகரமாக கைப்பற்றியது விஷால் -நாசர் அணி.
மோசடி நடந்திருக்கிறது என சொல்லிமுன்னாள் சங்கத் தலைவர் சரத்குமார் அணி மீது வழக்கும் இருக்கிறது.
இப்படியாக முட்டல் . மோதல் என இரு அணியினரும் இன்று வரை இருக்கிறார்கள். இத்தகைய நிலையில்தான் நயன் தொடர்பான மேட்டரில் ராதாரவியை ஒரு கை பார்த்து விடலாம் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஒரு பதிவு செய்திருக்கிறார்.
“அன்புள்ள ராதாரவி சார்.
ஆம், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் உங்களுக்கு எதிரான இந்த கண்டனக் கடிதத்தில் கையெழுத்திடுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அண்மையில் நீங்கள் வெளிப்படுத்திய முட்டாள்தனமான பேச்சு அதுவும் பெண்களை மையப்படுத்தி நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். வளருங்கள் சார். இனிமேல் உங்களை நீங்கள் ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள்.ஏனென்றால் ராதா என்பது ஒரு பெண்ணின் பெயர் அல்லவா?”
அப்பாவின் பெயரை தனது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ளுவதும் பொதுவான நடைமுறைதானே!