தேர்தல் காலம் .நடிகர்கள் அரசியலிலும் இருப்பதால் தங்களின் ரசிக மன்றத்தினருக்கு ‘சீக்ரெட் மெசேஜ் ‘அனுப்பி இருக்கிறார்கள்.
அண்ணனுக்கு இதயத்தில் இடம் அளித்திருந்தாலும் அரசியலில் தம்பி எதிரிதான்.
இருவருமே சூப்பர்ஸ்டார்ஸ்!
அண்ணன் காங்கிரசில் சில காலம் வாழ்ந்தார்.பின்னர் கசந்து போனதோ என்னவோ விலகியே வாழ்கிறார்.
தம்பிக்கு அண்ணனை விட செல்வாக்கு அதிகம். தொண்டர்களும் இளைஞர்கள்.
இந்த நிலையில் தான் அண்ணன் தனது ரசிகர் மன்றத்தினருக்கு ரகசிய செய்திகள் அனுப்பி இருக்கிறார்.
“சப்போர்ட் பிரதர்”
தானாடாவிடினும் தசை ஆடுமல்லவா!
அவர்கள் யார் என்பது புரிந்திருக்குமே!
அண்ணன் சிரஞ்சீவி, தம்பி பவன் கல்யாண்.ஜனசேனா தலைவர். “தமிழக அரசுக்கு சுய மரியாதை இல்லை” என்று விமர்சித்தவர்தான் பவன் கல்யாண்