“எலக்ஷனுக்கு முன்னாடி வந்திருக்கணும் சார். நாங்களும் ஒரு காட்டு காட்டிருப்போம்ல”என சூடானார் சூர்யாவின் பரம ரசிகர்.
“அதனாலென்ன பிரதர்,வந்ததும் அதகளம் பண்ணுங்க. மே 31 ம் தேதி தானே ரிலீஸ்! “
“அப்படித்தான் முடிவு பண்ணிருக்கோம்.சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடியே முதல் ஷோ பார்த்துடனும்”.
என்.ஜி.கே தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அதுக்கான ஏற்பாடுகளை பிரமாதமா பண்ணிடுவார்.என குஷியில் திரிகிறார்கள் என்.ஜி.கே.பொலிடிகல் படம் என்பதால் தேர்தலுக்கு முன் வந்திருக்கணும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.