போனிகபூருக்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் வரவேற்பு அவரது சொந்தமான வட மாநிலத்தில் கிடைப்பதில்லை. மும்பையில் திரைத்துறையை சார்ந்தவர்கள் கடுப்பாக பார்க்கிறார்கள்.
“இவரிடம் எப்படிய்யா உங்க அஜித் வந்து மாட்டினார்”என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
மலையாளத்தில் இருந்து இந்தியில் போட்ட ஊறுகாய்தான் ‘பதாய் ஹோ. காமடியான படம்.ஆயுஸ்மான் குரானா,நீனா குப்தா நடித்திருந்த 29 கோடி படம். செம கலெக்ஷன். மலையாளம் பேசிய பவித்ரம் படத்தைத்தான் இவர்கள் சுட்டு இந்தியில் துட்டு பார்த்திருக்கிறார்கள். தன்னுடைய காதலை அம்மாவிடம் மகள் சொல்ல வரும்போது 50 வயசான அம்மா கர்ப்பம்னா மகளுக்கு எப்படி இருக்கும்? அட அந்த வயசில் அம்மாவுக்கு கர்ப்பம் தரிக்கிற சான்சே இல்லேப்பா என்பதெல்லாம் காமடிக்கு ஒரு அம்சம்.
இந்த விஷயம் பவித்ரம் படக்குழுவுக்கு லேட்டாகத்தான் தெரிந்திருக்கிறது.
போடு கேசை!
ஜெயித்து விட்டார்களாம்.
“எங்களிடம் பேசாமல் வேறு யாரிடமாவது படத்தை பற்றி பேசினால் நடப்பதே வேற “என்று பவித்ரம் படக்குழு எச்சரிக்கை பண்ணியிருக்கிறது.
ஆனால் போனிகபூரோ பல மொழிகளில் எடுப்பதற்கு பேசி வருகிறார்..விலை கொடுத்து வம்பினை வாங்கி இருக்கிறார்.
தாங்குவார்பா