அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார். இன்று திடீரென தமிழக முதல்வர் எடப்பாடியாரை சந்தித்து வழக்கம்போல கை குலுக்கினார். வழக்கமான பொன்னாடையுடன் எடப்பாடியும் வரவேற்றார்.
இருவரது முகத்திலும் ஜெகஜோதியான பிரகாசம்.
இவரின் வரவைத்தானே எதிர்பார்த்து காத்திருந்தது. அதிமுகவும்.!
தனது சமத்துவ மக்கள் கட்சி அதிமுக அணிக்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தார்.
“தொங்கு பாராளுமன்றம் அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவினை எடுத்திருப்பதாக”சரத்குமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.முக்கியமான தொகுதிகளில் வேன் வழியாக பிரசாரம் செய்யப்போகிறார்.
கருத்துக் கணிப்பு நடத்தியவர்கள் கூட தெரிவிக்காத தொங்கு பாராளுமன்றம் பற்றி சரத்குமார் சொல்லியிருப்பதைப் பார்த்தால் காங்,கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது என்கிறார்கள்.