தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை வேடிக்கைகளை பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை.
உத்திர பிரதேச பிஜேபியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் ஐ.பி.சிங்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இவரை ஆறு வருடங்களுக்கு நீக்கம் செய்து கட்சி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இப்படி நடவடிக்கை எடுத்திருப்பது இரண்டாவது முறை.
ஆக நடவடிக்கை எடுப்பதும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததும் மறுபடியும் சேர்த்துக் கொள்வதும் அவர்களுக்கு பழக்கம் ஆனதுதான்.!
இந்த சஸ்பென்ட் நடவடிக்கை பற்றி ஐ.பி,சிங் காட்டமாகவே அறிக்கை விட்டிருக்கிறார்.
பிரதமர் மோடி,அமித்ஷா இருவரின் பெயரை குறிப்பிடாமல் பெல்ட் கொண்டு அடிப்பது மாதிரி சொல்லியிருக்கிறார் பாருங்கள், ராகுல் காந்திக்குக் கூட இப்படி சொல்லத் தெரியவில்லை.
“குஜராத்தின் இரு ஏமாற்றுப் பேர்வழிகள் கடந்த 5 ஆண்டுகளாக உத்திரபிரதேசத்தை எமாற்றி வருகிறார்கள்.
இவர் பிரதமரா? தன்னை விளம்பரப்படுத்துபவரா?
10 லட்சம் மதிப்புள்ள டிரஸ் போட்டுக்கொண்டு 100 பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடுகிறார்கள்.
ஒவ்வொரு பொதுக்கூட்டமும் 100 கோடி செலவு. ஆனால் தன்னை ஏழை என்கிறார்கள்.”
என்னய்யா நடக்கிது?