இந்தியாவின் தேசிய விளையாட்டுக்கு இல்லாத மரியாதை கிரிக்கெட்டுக்கு இருக்கிறது.
அதிலும் ஐபிஎல் என்றால் ரசிகர்களுக்கு இரவெல்லாம் பகலே!
கட்டணமும் கொள்ளை. கருப்பு சந்தையிலும் டிக்கெட்டுக்கு கொட்டிக் கொடுக்கிறார்கள். தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு என்றாலும் நேரில் பார்க்கிற திருப்தி இருக்காதல்லவா!
1983-ம் ஆண்டு இந்தியாவுக்கு மறக்க முடியாத ஆண்டு.
உலகக் கோப்பையை இந்திய டீமின் கேப்டன் கபில்தேவ் தட்டிக்கொண்டு வந்த ஆண்டு.
அன்று அந்த டீமில் விளையாடிய தமிழர் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி.
83 என்கிற பெயரில் அந்த போட்டியை திரைப்படமாக எடுத்து வருகிறார்கள்.
கபில்தேவாக ரன்வீர் சிங்.
ஸ்ரீ காந்த் ஆக நம்ம ஜீவா.
இந்த படத்துக்கு பணியாற்றுகிற உதவி இயக்குநர்களில் அமியா தேவ். கபில் தேவின் மகள் எழுத்தாளரும் ஆவார்.தாகூரைப் பற்றிய புத்தகம் அண்மையில் வெளியானது.
நம்ம ஸ்ரீ காந்தின் மேனரிசம் படத்தில் இடம் பெறுமா என தெரியவில்லை. அவரைப் போல மூக்கு உறிஞ்சிவாரா நம்ம ஜீவா என்பதும் தெரியல.லண்டனில் 100 நாள் ஷூட்டிங்.
ஜீவா நல்ல கிரிக்கெட் வீரர் வடநாட்டவர் சரியான ஆளைத் தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.