பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச்சென்று வீழ்த்திய விமானி மாவீரன் அபிநந்தன்.கடமை நிமித்தம் மீண்டும் ஸ்ரீ நகர் சென்று விட்டார். நாட்டுப்பற்று!
நமது மொழிப்பற்றுக்கு வருவோம்.
இன மான உணர்வுடன் பேசக்கூடியவர்களில் மக்கள் செல்வன் விஜய சேதுபதிக்கு முக்கிய இடம் இருக்கிறது.
தப்பான தமிழில் படங்களுக்கு பெயர்களை வைக்க சம்மதிக்கிற சில ஹீரோக்களுக்கு மத்தியில் வித்தியாசமான தமிழனாக இருக்கிறார் விஜயசேதுபதி.
தளபதி விஜய் தமிழனாக இருந்தும் ‘சர்கார்’ என பெயரை ஒப்புக் கொண்டு நடித்தார். அவர் நினைத்திருந்தால் நிச்சயம் தவிர்த்திருக்கலாம். . தளபதி நடித்திருந்தார் என்பதினால்தான் அந்தப்படம் ஓடியது.கூடுதலாக அதிகார வர்க்கத்தின் மிரட்டலும் ஆளும் கட்சியின் அடாவடியும் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
அவர் ஏனோ எவர் சொன்ன ஆலோசனையை கேட்டு ‘சர்கார்’ என்கிற பெயரில் நடித்து விட்டார். தமிழுக்குப் போராடுகிறோம் என சொல்லும் சன் நிறுவனமும் இதற்கு ஒத்துக் கொண்டதுதான் ஆச்சரியம்.!
ஆனால் மக்கள் செல்வன் விஜயசேதுபதி அடிக்கடி வெளிவட்டங்களுக்கு வருகிறார்.சமூக அநீதிகளை கண்டிக்கிறார்.
பொள்ளாச்சி மாணவியின் அழுகுரல்,கதறல் மக்கள் செல்வனின் இதயத்தில் குத்தீட்டியாக இறங்கியது .குரல் கொடுத்தார்.
“இன்னுமா தண்டிக்கவில்லை ?” என பொங்கினார்.
அந்த மக்கள் செல்வன் விஜயசேதுபதி நடித்து வருகிற படத்தின் பெயர்தான்’சங்கத் தமிழன். ‘ கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு கட்ட படப்பிடிப்பு நடந்திருக்கிறது.இயக்கம் விஜய சந்தர்,
நாசர்,ஜான் விஜய்,இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு நம்ம வேல்ராஜ்.
தங்களின் படங்களுக்கு பெயர் வைப்பதில் முன்னணி நடிகர்கள் அக்கறை காட்டவேண்டியது அதுவும் தமிழ்ப்பெயர்களாக வைப்பது காலத்தின் கட்டாயம்.
இதில் தளபதி விஜய் தமிழுக்கு ஆதரவாக இனியாவது இருப்பாரா? ‘சர்கார்’ மாதிரியான பெயர்கள்தான் தொடருமா? தளபதி விஜய் என்றால் அரசுக்கே நடுக்கம் இருக்கிறபோது அவர் யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை.மக்கள் அவர் பக்கம் இருக்கிறார்கள்.
வடமொழியின் ஆதிக்கம் அரசுத்துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருவது அதிகமாகி வருகிறது .