பரபரப்பான செய்தியை தட்டிவிட்டு துடிப்பாக துருக்கி சென்றிருந்தவிஷாலுக்கு விபத்து வீல் சேரை காட்டி விட்டது.
எப்போதுமே பரபரப்பாக இயங்குகிறவர் விஷால். விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.
சொந்தப்படமான ‘அயோக்யா’ படத்தை தொடந்து இயக்குநர் சுந்தர்.சி.யின் படத்தில் நடித்து வருகிறார்.படப்பிடிப்புக்காக துருக்கி சென்றிருந்தார்.
ஸ்டண்ட்மாஸ்டர் அன்பறிவ் இவருக்காக வடிவமைத்திருந்த ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. பைக் விரட்டு.
பொதுவாக பைக் ஸ்டண்ட் என்றால் அது தல அஜித்துக்கு பிரியாணி சாப்பிடுவது மாதிரி! அப்படி அவர் அடிக்கடி சாப்பிட்டுத்தான் விபத்துகளை வேண்டாத விருந்தாளிகளாக ஏற்க வேண்டியதிருந்தது. எத்தனை எலும்பு முறிவுகள்!
அத்தகைய பைக் விரட்டல்தான் விஷாலை நிலை தடுமாற வைத்திருக்கிறது.
சார்,வீல் சேரில் எப்படி கட்டுப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள்.
சுந்தர்.சி.யின் ஷூட்டிங் மட்டும் இல்லாதிருந்தால் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலாவது அண்ணனின் முழக்கத்தை கேட்டிருக்கலாம்.
படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டதாக ஒரு சேதி.