ஒரு வடிவேலு காமடி இல்லேன்னா அது எவ்ளோ பெரிய டி.வி.யாக இருந்தாலும் மரியாதை கம்மிதாங்க.
அது மாதிரி ஆகிப்போச்சு தேர்தல் கால அரசியலும்.!
மூத்திர சந்தில விட்டு நாலஞ்சு பேரு அடிச்ச கதையை வடிவேலு சொல்லிட்டு “ரொம்ப நல்லவேன்னு சொன்னாய்ங்க”என்று புல்ஸ்டாப் வைக்கிறபோது எவ்ளோவ் பெரிய கஷ்டம் இருக்கிறவனும் சிரிக்காம இருக்க முடியாது. அத மாதிரிதான் நம்ம கேப்டனும்.!
கெத்தா கருப்புக்கண்ணாடி ,நெஞ்ச நிமித்தி பேசுறது,அப்பப்ப நாக்கு துருத்துறது,கேள்வி கேட்டா எட்டிக்கிட்டு அரை விடுறது இப்படி எந்த காமடியும் இல்லாம போச்சே!
கேப்டனின் சுற்றுலா இல்லாத தேர்தல் பிரசாரம் ஒரு பிரசாரமய்யா! ஒரு நிருபருக்குக்கூட அறை வாங்கிற பிராப்தம் இல்லாம போச்சு!
ஆனா அந்த குறையை ஆந்திராவ்ல என்.டி.ஆர். பிள்ள பாலகிருஷ்ணா தீர்த்து வெச்சிட்டார்.
தேர்தல் பிரசாரம் .தெலுகு தேச கட்சிக்கு.!
அப்படியே மத்தியான லஞ்சுக்கு ஒரு ரசிகனின் வீட்டுக்குப் போயிருக்கார்.நம்ம ஊரு மாதிரியே மோளம் அடிச்சு ,குத்தாட்டம் போட்டு வரவேற்பு. சாப்பிட்டு திரும்புறப்ப ஒரு டி.வி.ரிப்போர்ட்டர் என்ன கேட்டானோ தெரியல…!
ஆத்தா,அம்மான்னு திட்டிட்டு கன்னத்தில ஒரு அப்பு அப்பு!
அலறிப்போனான் அந்தாளு!