பட்டி மன்றத் தலைப்பு மாதிரி தெரியிதுல்ல.?
கவர்ச்சிக்கும் நடிப்புக்கும் தமிழ்நாடும் ஆந்திரமும் பக்கத்துப் பக்கத்து வீடுகள் மாதிரி!
நம்ம முப்பாட்டன் காலத்தில் தவமணி தேவி.
பாட்டன் காலத்தில் மாதுரிதேவி.
அப்பன் காலத்தில் சி ஐ டி சகுந்தலா
நம் காலத்தில் எத்தனையோ சிறப்புகள். கவர்ச்சியாக வந்திறங்கியவர்களை கலைப்படைப்புகளாக மாற்றிய பெருமை தமிழக இயக்குநர்களை சேரும். சில வெளி மாநிலத்து மூளைகளும் அடங்கும்.
இப்ப கவர்ச்சியில் ஆந்திரம் முன்னேறி உயரத்தில் இருக்கிறது.டிம்பிள் ஹயாத்தி, ஈஷா ரெப்பா,என அங்கு கொடி கட்டி பறக்கிறார்கள்.
கவர்ச்சி, சிறந்த நடிப்பு இவை அரிதான ஒரு கூட்டணி. ![](https://cinemamurasam.com/wp-content/uploads/2019/03/IMG_3074.jpg)
![](https://cinemamurasam.com/wp-content/uploads/2019/03/IMG_3074.jpg)
நடிகை சம்யுக்தா ஹெக்டே,இயற்கையாகவே இந்த வரத்தை பெற்றிருக்கிறார். அவரது பப்பி படம் மிக வேகமாக உருவாகி வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் வாட்ச்மேன் படம் தமிழில் முதல் படமாகியிருக்கிறது.
, “நான் இந்த படத்தை பற்றி பேசுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன். கதை சொல்லல் ஆகட்டும் அல்லது தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகட்டும், தமிழ் சினிமா மிகச்சிறப்பாக இருக்கிறது. நான் தமிழ் சினிமாவில் 2-படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த இரண்டுமே புதுமையான கருத்துக்களை கொண்டு உருவானவை தான். அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை. இந்த இரண்டு படங்களுக்கும் இடையிலான ஒரு பொதுவான தன்மை ‘நாய்’.
ஆம், மிகவும் தற்செயலாக நடந்தாலும், எனக்கு பிடித்த செல்லப்பிராணிகளுடன் திரையில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் இந்த இரு திரைப்படங்களுமே வேறு வேறு வகையை சார்ந்தவை” என்கிறார்.
வாட்ச்மேன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி அவர் கூறும்போது, “இது முற்றிலும் எனக்கு ஒரு புதிய அனுபவம். இயக்குநர் விஜய் சார், பெண் நடிகர்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டுபவர். ‘
வாட்ச்மேன்’ படத்துக்காக என்னை அணுகியபோது, அது என்ன வகை படம் என்பதையோ அல்லது கதையை பற்றியோ நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த படம் நிச்சயம் என்னை மேம்படுத்துவதற்கு உதவும் என எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.
படத்தின் முடிவில், என் அனுமானங்களும் நம்பிக்கையும் சரி தான் என்பதை படம் நிரூபித்திருக்கிறது. ஏப்ரல் 12, 2019 அன்று படம் வெளியாவதால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மந்திரவாதிகள். ” என்றார்.
டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் (இசை), நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி (ஒளிப்பதிவு), ஆண்டனி (படத்தொகுப்பு), ஏ ராஜேஷ் (கலை) மற்றும் மனோகர் வர்மா (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.