என்னத்த சொல்றது…இந்த எலக்சன் கமிசன் பண்ற லூட்டியை.!
இப்பத்தான்யா ராதாரவி -நயன்தாரா பிரச்னை கிளம்பி ஒரு வழியா ஓய்ஞ்சிருக்கு..அதுக்குள்ளே பெண்ணிய போராளிகளை மறுபடியும் உசுப்பி விட்டுட்டாங்களே.!
சின்மயி,கருத்து கஸ்தூரி இவங்களைஎல்லாம் கூப்பிட்டு பஞ்சாயத்தை கூட்ட வேண்டியதுதானே!
நடிகை நமீதாவும் கணவர் வீராவும் காரில் ஏற்காடு போயிருக்காங்க.!அங்க ஷூட்டிங்.
காரில் எட்டு மணி நேரம் பயணிக்கணும்.
போகிற வழியில் மூணு இடங்களில் சோதனை!
கண்ணியமான ஆளுங்க போலிருக்கு.அதிகாரத் திமிரை காட்டல..
ஆனால் எலக்சன் கமிசன் சோதனை என்கிற பெயரில் ஒரு இடத்தில் அதிகாரி பண்ணிய அராஜகத்தை வீரா சொன்னபோது இப்படியெல்லாமா மனுசனுங்க நடந்துக்குப்பாங்கன்னு தோணுச்சு.
வீரா சொல்றார்.
“சார் என் மனைவி நமீதா. பின்னாடி தூங்கிட்டிருக்காங்க.கார் கதவு மேல தலை வெச்சிருக்காங்க..கதவை திறக்க வேணாம்னு சொன்னேன்.
அந்த அதிகாரி கேட்கல. படக்னு டோரை திறக்க நமீதா விழ….
இதென்ன சார் எலக்சன் கமிசன் சோதனை.
பக்காவா ஒவ்வொரு பையையும் சோதனை செய்தார்கள். நமீதா எதுவும் சொல்லல.
ஆனால் அவரது பெட்டியை செக் பண்ண வந்தபோது “ஒரு பெண் போலீசை வச்சு செக் பண்ணுங்க.பெண்களுக்குரிய பொருள்கள் இருக்கு..ஒரு ஆண் அத செக் பண்ண வேணாம்னாங்க.
இது நியாயமா இல்லையா?அந்தரங்க பயன்பாட்டுக்குரியவைகளை ஆண்கள் சோதனை செய்வது பெண்ணின் உரிமையை பாதிக்கிறது” என்கிறார்.!.
சத்தியமான உண்மை.!