அகோரம் சகோதரர்கள் எடுக்கும் புதிய படம் சென்னைக்குள்ளும் ,அதையொட்டிய புறநகர்ப் பகுதியிலும் எடுக்கப்பட்டு வருகிறது.
நேப்பியர் பாலம் போல சாலிகிராமம் பிரசாத் லேப்பில் பிரமாண்டமான செட் போட்டிருந்தார்கள். இதைப்போல சென்னைக்குள் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
இதற்கு காரணம் என்ன?
“கதை வடசென்னைக்குள் நடக்கிறது..ஆகவே இங்கேயே நடந்தால் நல்லது.இதனால் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள்,லைட்மேன்கள் ஊதியம் பெறுவார்கள். இந்த வகையிலும் அவர்களுக்கு நாம் உதவ முடியும் ஆகவே இப்படியே நடத்துங்கள்” என்று தளபதி விஜய் சொல்லிவிட்டாராம்.நல்ல சிந்தனை. விரோதிகளையும் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்கிற மனம் தளபதிக்கு மட்டுமே உண்டு.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் விஜய் சென்னை திரும்பியதும் இயக்குநர் அட்லியின் படப்பிடிப்புத் தொடங்கி விடும்.