நடிகை லட்சுமி போல் சமூக அக்கறையுள்ள உண்மையான பெண்ணை திரை உலகில் பார்க்க முடியவில்லை.ஸ்ரீ வித்யாவும் கருத்துகளை பதிவு செய்வார். இவர்களைப் போல தமிழ்ச்சினிமாவில் பெண்ணிய தாக்கமுள்ளவர்களை காண முடியவில்லை. வரலட்சுமி சரத்குமாரிடம் ஓரளவு அத்தகைய தாக்கம் இருக்கிறது. அவர் சரத்குமாரின் மகள் என்பதால் அத்தகைய தாக்கம் இருக்கிறதா?
அல்லது அவரது வாழ்க்கை கற்றுத்தந்த பாடமா ?
தெரியவில்லை.
அண்மையில் அவரது ட்விட்டர் பதிவில் புதிதாக பச்சை குத்தி இருப்பதை படம் எடுத்துப் பதிவு செய்திருந்தார்,
உண்மையான வார்த்தைகள்.!முகமூடியும் முகமும் அருகருகே!
“நாம் எல்லோருமே முகமூடி அணிந்தவர்கள்” என்பதை உணர்த்தியது. அவருக்கு சினிமா மீதான அன்பை வெளிப்படுத்துவதாக அந்த ‘டாட்டு ‘சொல்வதாக சொல்லி இருக்கிறார். “பொய்களின் ‘மத்தியில் வாழ்வதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
பெண்களை மலிவாக நயன்தாராவே பேசுகிற வசனம் பற்றியும் அவர் கருத்து சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.