அரசியல் வசனங்களை யார் வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் விஜய் பேசினால் மட்டும் தாங்க மாட்டோம் என்கிற ரீதியில் இருக்கிறார்கள் ஆளும் கட்சி தரப்பினர்.
சர்கார் படத்துக்கு அவர்கள் ஆடிய ஆட்டம் என்ன, கிழித்துப் போட்ட பிளக்ஸ்கள் என்ன, உடைத்த கட்அவுட்டுகள் என்ன ,அப்பப்பா…தாங்க முடியலிங்க.
இப்ப யோகிபாபு கிழிக்கிறார் .எமனாக நடிப்பதால் அவரிடம் நெருங்கப் பயமோ என்னமோ.! மனிசனுக்கு உயிர் பிரச்னை. எமனை சினிமாவில் கூட பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற உயிர்ப்பயம்.!
“பூலோகத்தில்தான் தகுதியற்றவர்களுக்கு பதவிகள் என்றால் இங்கு யமலோகத்திலுமா?
இங்கு எல்லோரும் தகுதியுடன்தான் பதவியில் இருக்கிறர்களா?
அம்மா போனால் சின்னம்மா,அய்யா போனால் சின்னையா,?
அக்கவுண்டில் பணம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஆடைகளாக வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார்?”
போன தேர்தலில் மோடி சொன்ன வாக்குறுதிகளில் ஒன்றுதான் அக்கவுண்டில் 15 லட்சம் பணம் போடப்படும் என்கிற உறுதிமொழி.
இப்படி அரசியல் தொடர்பான வசனங்களை யோகிபாபுவை வைத்து பேச வைத்திருக்கிறார்கள்.