கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகாஆப்தே ,தன்ஷிகா ,கலையரசன், உள்பட பலர் நடித்து வரும் புதிய படம்,கபாலி.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. வருகிற 17 ந்தேதி சென்னை ஏர்போட்டிலும் ,அதைத் தொடர்ந்து மலேசியாவிலும் படபிடிப்பு நடப்பதாக கூறப்படுகிறது இதில் ரஜினிகாந்த் மலேசிய தாதாவாக நடிப்பதாகவும் இல்லையில்லை ,போதைகடத்தல் கும்பலை பிடிக்கும் உளவுத் துறை போலிஸ் அதிகாரியாகவும் நடிப்பதாகவும் பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது தற்போது ரஜினி கையில் சிகரெட்டுடன் தோன்றும் ஒரு ‘கிராபிக்ஸ்’ புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.