முத்தம் என்றாலே மேனி சிலிர்க்கிறது.
மோனத் தவமிருந்த முனிவனும் இச்சென சொல் உதிர்த்து தவம் கலைகிறான்.
அப்படி என்ன அதில் இருக்கிறது.
ஆணின் உதடுகளுடன் பெண்ணின் உதடுகள் உரசிக்கொள்ளும்போது மேனி சிலிர்ப்பது எதனால்?
உதடுகளின் உராய்தலினால்தான் உடலுக்குள் சுனாமி சுரக்கிறதோ?
முத்தம்தான் தேக சுகத்தின் திறவு கோலாக இருக்கிறது.
கண்ணதாசன் பாடுகிறார் இப்படி….
“உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது.
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருந்தது.
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது”
நமது திரைப்படங்கள் சொல்வதும் இதைத்தானே!
“சத்தமில்லாமல் படங்களுக்காக முத்தமிடுகிறீர்களே, உங்களின் உணர்வுகள் எப்படி இருந்தது?”
நடிகை ஹெபா படேலிடம் கேட்டதும் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறி விட்டார்.
அர்ஜுன் ரெட்டி,ஆர் எக்ஸ் 100, 24 முத்தங்கள் ஆகிய படங்களில் நடித்திருப்பவர்தான் இந்த ஹெபா படேல்.
அவரது முத்தக்காட்சிகள் கிளர்ச்சியை உருவாக்கியது என்பதே உண்மை.