பாஜக வின் மூத்த தலைவர்களில் நடிகர் சத்ருகன் சின்காவும் ஒருவர்.
ஒரு காலத்தில் அத்வானியின் பேச்சுக்கு ஒலிபெருக்கியை தாங்கிப் பிடித்தவர் மோடி. அந்த அத்வானியையே ஒத்திக்கோ ஒத்திக்கோ என ஓரம் கட்டியவர் இந்த முன்னாள் நடிகரை ஒதுக்கித் தள்ளியதில் வியப்பில்லை.
இவர் காங்கிரசில் சேரப்போகிறார்.
இப்பத்தான் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நேசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
காங்.கட்சிக்கு சத்ருகன் சின்கா எந்த அளவுக்கு உதவியாக இருப்பார் என்பது தெரியவில்லை.
அவரால் பலன் எதுவும் இல்லை என்பதால்தானே மோடி தூக்கி விசி இருக்கிறார்.
சரி அப்பாவின் முடிவு பற்றி மகள் சொனாக்ஷி சின்கா என்ன சொல்கிறார்?
“எப்பவோ எடுத்திருக்கணும்.லேட்டா முடிவு எடுத்திருக்கிறார்.மோடியின் தலைமையில் அப்பாவினால் செயல்படமுடியாது”என்கிறார்.