கே.சி பொகாடியாவின் புதிய படம் ‘ராக்கி த ரிவெஞ்’ இந்த தமிழ்ப்படத்தில் ஸ்ரீ காந்த் ,நாசர்,ஒஏகே.சுந்தர் மற்றும் எஷான்ஷியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கதை என்ன சொல்கிறது?
சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டிக்கு சிகிச்சை கொடுத்து ராக்கி என்று பெயர் வைக்கிறார்.
அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள்.
ராக்கி மிகவும் புத்திசாலியாக இருப்பதால் துப்பறியும் நாய் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார்.
கமிஷனர் செல்வம் கண்ணியமானவர். சந்தோஷை மகன் மாதிரி கருதி வருகிறார்.
எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் சமூக விரோதிகள். அவர்களை சந்தோஷ் கைது செய்து லாக்கப் பில் அடைக்க இருவரும் சாமர்த்தியமாக தப்பி விடுகிறார்கள்.அவர்களை
கைது செய்ய சென்ற சந்தோஷ் கொலை செய்யப்படுகிறார்.
இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் இருவரும் கமிஷனர் செல்வத்திடம், சந்தோஷைக் கொலை செய்தது யாரென்று தெரியவில்லை என்று பொய் சொல்கின்றனர்.
ஆனால், ராக்கி சந்தோஷைக் கொலை செய்த எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர், ராஜா, சேகர் ஆகிய நால்வரையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்பது கதை..