எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் படம் ” தமிழரசன் “
இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ரொமான்ஸ் வராது ,முகத்தில் காதல் உணர்ச்சியே காட்டத்தெரியாதவர் என்றெல்லாம் எழுதிய பத்திரிகையாளர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த படத்தில் காதல் காட்சியில் பின்னியிருக்கிறார் என்கிறார்கள்.நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
மற்றும் ராதாரவி ,சுரேஷ்கோபி,சோனு சூட்,யோகிபாபு,மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.
இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கி முடிவடைய உள்ளது.