எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும் விபத்துக்கு மட்டும் வேலி போட முடியாது.
அது வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படத்திலும் நடந்திருக்கிறது.
தமிழ்ப்படங்களைப் போல கன்னடப் படங்களிலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. வி.சமுத்ரா இயக்கத்தில் ரணம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறாராம்.
இந்த படத்தில் இரு கார்கள் பயங்கரமாக மோதிக் கொள்வதைப் போல பெங்களூருக்கு அருகில் பட,மாக்கி இருக்கிறார்கள். அப்போது வெடித்து சிதறிய தீப்பொறி அங்கிருந்த கியாஸ் சிலிண்டரில் பட்டு பயங்கரமாக வெடித்து சிதறி இருக்கிறது.
இதில் வேடிக்கைப் பார்க்க வந்திருந்த ஐந்து வயது சிறுமியும் அம்மாவும் அதே இடத்தில் பலியாகிவிட்டார்கள்.
இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன் அனுமதி பெறவில்லையாம்.