மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து யாரையோ பார்த்து ஏவி விட்ட வார்த்தைகள் இன்று சினிமா உலகில் சிலம்பெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது.
நயன்தாராவைப் பற்றி ராதாரவி சொன்னதாகசொல்லப்பட்ட ஆபாச சொல்லை விட நயன்தாரா பேசிய வசனங்கள் படு ஆபாசமாக இருக்கிறது என்று குடும்பத்துப் பெண்கள் படு கோபமுடன் இருக்கிறார்கள்.
ராதாரவி சொன்னது பற்றி மேற்குத் தொடர்ச்சி மலை இயக்குநர் லெனின் பாரதியிடம் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நியாயமான பதிலை தில்லாக சொல்லியிருக்கிறார்.
“ராதாரவி பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் எப்போதும் இப்படிதான் பேசுவார்.
நயன்தாராவைப் பற்றி பேசியதற்கு கோபப்பட்ட விக்னேஷ்சிவன் இதே நயனை வைத்து எடுத்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் பல இரட்டை அர்த்தங்களை பேச வைத்திருப்பார்.உங்களைப் போடணும் சார் என்று பார்த்திபனை பார்த்து சொன்ன போது ரசிகர்கள் கைதட்டினார்கள்
இந்தமாதிரி இரட்டை அர்த்தங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததே இவர்கள்தான்.
இவர்கள் இரட்டை அர்த்த வசனங்களை வைத்து சம்பாதிப்பார்களாம்.இதுவே இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்தால் கோபப்படுவார்களாம், விக்னேஷ் சிவன் ,நயன்தாராவும் ஒரு ராதாரவிதான்!”என காட்டமுடன் சொல்லி இருக்கிறார்.