1893-ல் பிறந்த துறவி பரமஹம்ச யோகானந்தர் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம்,
அக்காலகட்டத்தில் வாழ்ந்த மெய்ஞானிகளின் மறைஞான வழிமுறைகள், யோகம் மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்கிற அபூர்வ நூல்
.ஒரு யோகியின் சுயசரிதையை தனது குழந்தைப் பருவத்தில் இருந்து தொடங்கும் பரமஹம்ச யோகானந்தர், சிறுவயதில் தனக்கு இருந்த பொறுமையின்மை, அகந்தை ஆகியவற்றையும், தன் குருவிடம் அதற்காக பெற்ற விமர்சனத்தையும் வெளிப்படையாக இந்நூலில் கூறியுள்ளார்..
மகா அவதார் பாபாஜி, லாகிரி மகாசயர், அன்னை ஆனந்த மயி , நெரூர் சதாசிவ பிரமேந்திரர், வங்காள யோகினி ரிஷிபாலா, கிருஷ்ணானந்தர் என பல துறவிகளின் வாழ்க்கை மற்றும் போதனைகளை இந்நூலில் அறிந்துகொள்ள முடியும். விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோசை ஒரு மறைஞானியாக அறிமுகம் செய்யும் அத்தியாயம் கவிதைக்கு நெருக்கமானது.
யோகாதா சத் சங்கா சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் ஒரு யோகியின் சுய சரிதை, ஆ டியோ ஒலிநூல் வெளியீடு, நடைபெற்றது .
நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார் . ,பேராசிரியை சாரதாநம்பி ஆரூரான் ஒலிப்பதிவு நூலை வெளியிட்டார்.யோகாதா சத் சங்கா நிர்வாகி சுவாமி சுத்தானந்தா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
—